Britain King Charles III Net Worth In Tamil: சர்வதேச அளவில் நேற்று மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திய தகவல் எனஅறால், அது நேற்று பிரிட்டனின் அரச குடும்பம் தரப்பில் வெளியிடப்பட்ட அந்த திடுக்கிடும் செய்திதான். பிரிட்டன் அரச குடும்பம் தரப்பில் இருந்து நேற்று X தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசர் சார்லஸ் III கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரது உடல்நிலை சரியாகி இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்ப இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் போன்ற தலைவர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 


இது ஒருபுறம் இருக்க அரசர் சார்லஸின் சொத்து மதிப்பை தெரிந்துகொள்ளவும் மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். கூகுளில் அரசர் சார்லஸின் சொத்தும் மதிப்பும் அதிக முறை தேடப்பட்டதாகவும் தெரிகிறது. அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை அரசர் சார்லஸ் III சொத்து மதிப்பு குறித்து வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் இளவரசராக இருந்தபோது அவரின் சொத்து மதிப்பு, தற்போதைய சொத்து மதிப்பு ஆகியவற்றை காணலாம். 


மேலும் படிக்க | உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? எண்ணெய், தங்கம் அதிகம்..!


இளவரசராக இருந்தபோது...


அவர் வேல்ஸின் இளவரசராக இருந்தபோது, அவரின் சொத்து மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 433 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வணிகம் சார்ந்த சொத்து என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு 52 ஆயிரம் ஹெக்டர் நிலம் உடமையாக இருந்தது. அதாவது, லண்டனில் மூன்றில் ஒரு பகுதியாகும். 


மேலும் சொத்து மதிப்பை அதிகரிப்பதில் இவர் கைத்தேர்ந்தவர் என்றும் கூட சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக, 2011ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரை இவரின் சொத்து மதிப்பு சுமார் 51% வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது. 


அரசரான பின்னர்...


கடந்த 2022ஆம் ஆண்டு செப்.8ஆம் தேதி அன்று இங்கிலாந்தின் எலிசபெத் ராணி II காலமானார். அதன்பின்னர், இளவசரர் சார்லஸ் III அரசராக மகுடம் சூடினார். அரசரான பின்னர், ராணி வாரிசுதாரர் என்ற முறையில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு இவருடயைதாகியது. குறிப்பாக, ராணியின் எஸ்டேட்டுகளான ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டை இவருக்கு கைமாறியது. 


மேலும் ராணியின் நகைகள், அவர் வைத்திருந்த விலைமதிப்பு மிக்க ஓவியங்கள், அவரின் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவையும் அரசர் சார்லஸிற்கு கிடைத்தது. இதன்மூலம், அவரின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அவரின் சொத்துக்களில் அவரின் சொகுசு கார்கள், விலை மதிப்பில்லாத தபால் தலைகள், பந்தைய குதிரைகள் ஆகியவையும் அடங்கும்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ