இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு மக்கள் ஓட்டளித்தததால் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர். இதில் ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.


இந்த நிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார். அதையடுத்து, தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றார். 


தெரசா பிரிட்டனின் 2-வது பெண் பிரதமராவார். இதற்கு முன் கடந்த 1979 முதல் 1990 வரை மார்க்ரெட் தாட்சர் பிரதமராக இருந்துள்ளார்.