லண்டன்: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் புதன்கிழமையன்று (2022, ஜூலை 06)  10,300 குறுகிய தொலைவு செல்லக்கூடிய விமான சேவைகளை குறைத்துள்ளது.


ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் 10,300 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. . இந்த விமான சேவை குறைப்பு அக்டோபர் மாதம் வரையில்லான மொத்த விமான சேவை குறைவுக்கான மொத்த எண்ணிக்கை ஆகும்.


இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குழும கூட்டு ஸ்தானபத்திற்கு (Conglomerate International Airlines Group (IAG))சொந்தமான விமான போக்குவரத்து நிறுவனம், அதன் மொத்த கோடை கால அட்டவணையில் 13 சதவீதத்தை இப்போது ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? பரபரப்பு ஊகங்கள் உண்மையாகுமா?


கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கோடையில் நூற்றுக்கணக்கான விமான ரத்துகளை ஏற்கனவே அறிவித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஒட்டுமொத்த விமானத் துறையும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டு வருகிறது, மேலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் எங்கள் செயல்பாட்டில்  முழுமையாக கவனம் செலுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. 


பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை என்பதோடு, இங்கிலாந்தின் தொழில்துறையில் கொந்தளிப்பான சூழ்நிலையும் நிலவுகிறது.  
 
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஹீத்ரோ விமானநிலைய ஊழியர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர்  வெளிநடப்புகளுக்கு ஆதரவாகவாக்களித்தனர்.  "ஸ்லாட் ஒழிப்பு நடவடிக்கைகள்" பிரிட்டிஷ் ஏர்வேஸில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.  


மேலும் படிக்க | இங்கிலாந்து பிரதமராக இவர் பதவி ஏற்கலாம்
 
அக்டோபர் வரையிலான விமான சேவை ரத்து என்பது, மக்களின் பயணத் திட்டங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ், "எங்கள் பெரும்பாலான விமானங்கள் பாதிக்கப்படவில்லை மற்றும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் திட்டமிட்டபடி பயணிப்பார்கள். இருந்தாலும் எங்களுடைய சேவை குறைப்பு நடவடிக்கை ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை, மேலும் அவர்களின் பயணத்தைப் பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப திட்டமிடுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.


லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குழும கூட்டு நிறுவனம் ஐஏஜி, பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கோவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் குறைந்தது என்றும் இனி வழக்கம்போல லாபத்தை ஈட்டும் என்று சமீபத்தில் கணிப்பு வெளியிடபப்ட்டது.  


மேலும் படிக்க | சுமார் 900 இண்டிகோ விமானங்கள் தாமதம்; விளக்கம் கோரும் DGCA


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR