கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரிட்டனில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது. சில நேரங்களில் கொசுக் கடி காரணமாக ஏற்படும் நோய்களால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சம்பவத்திலும், ஒரு பெண் கொசுக்கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கோமா நிலைக்கும் சென்ற சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இறுதியில் அவரது கைகளையும் கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில்  ஏற்பட்ட சில எதிர்வினைகள்


கொசுவினால் வாழ்க்கை பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் ஒரு பிரிட்டிஷ் பெண் நடனக் கலைஞருக்கு நேர்ந்தது. ஒருமுறை இந்தப் பெண் நடனக் கலைஞரை கொசு கடித்ததால், முதலில் அவருக்கு லேசான நோய் ஏற்பட்டது. இந்த நோய் மலேரியாவாக மாறியது. மலேரியாவை குணப்படுத்த, அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது, பின்னர் அங்கிருந்து அவளது வாழ்க்கையின் மோசமான நாட்கள் தொடங்கின. மலேரியா நோய்க்கான சிகிச்சையின் போது, ​​அந்த பெண்ணின் உடலில் சில எதிர்விளைவுகள் ஏற்பட்டு, மேலும் நோய்வாய்ப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது.


மேலும் படிக்க | தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!


கொசு கடியினால் ஏற்பட்ட மலேரியா
டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், லண்டனில் உள்ள கேம்பர்வெல்லில் வசிக்கும் இந்த பெண் நடனக் கலைஞரின் பெயர் டாடியானா டிமோன் எனவும், சில நாட்களுக்கு முன் விடுமுறைக்கு சென்றிருந்த அவருக்கு கொசுக்கடியால் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையின் போது, ​குணமடைவதற்குப் பதிலாக, அவரது நோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. சிகிச்சையின் போது சிறிது காலம் கோமா நிலையில் இருந்தாள். மயக்க நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நடனக் கலைஞரின் உயிரை காப்பாற்ற முடிந்ததே தவிர அவர் தனது கை கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டது.


தீவிரமடைந்த நோய் 


கடைசியில் நோய்த்தொற்று அதிகரித்ததையடுத்து அவரது இரு கால்களையும் கைகளையும் துண்டிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவனுடைய வாழ்க்கை முற்றிலுமாக அழிந்தது. கோவிட் காலத்தில் முதல் முறையாக நோயை அனுபவித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தபோது, ​​அவருக்கு மலேரியா இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு அதிகரித்தது. தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், உடல் உறுப்புகளை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.


மேலும் படிக்க | ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை! அதிர்ச்சி கொடுத்துள்ள உகாண்டா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ