பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சி மெஜாரிட்டியை இழந்தது!
பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.
தொடக்கத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுது. ஆனால் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 650 இடங்களில் 636 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
> கன்சர்வேட்டிவ் கட்சி 312 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
> தொழிலாளர் கட்சி 260 இடங்களை பிடித்துள்ளது.
மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்க்கும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
640 தொகுதிகளின் வெற்றி நிலவரம்:-
கன்சர்வேட்டிவ் கட்சி - 312
தொழிலாளர் கட்சி - 260
ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி - 35
லிபரல் ஜனநாயக கட்சி - 12
ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி - 10
மற்றவை - 11