வாஷிங்டன்: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா எதிர் வினையாற்றியுள்ளது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வெளியான அறிவிப்பை குறித்து கவலையளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர், மறுபுறம் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த கருத்து முக்கியமாகப் பார்க்கப்படுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிஏஏ சட்டம் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா


இந்தியாவில் "குடியுரிமை திருத்தச் சட்டம் மார்ச் 11 அன்று அமல்படுத்தியதைக் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


ஒரு கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரம் மற்றும் சட்டத்தின் கீழ் அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்" என்றார்.


மேலும் படிக்க - குடியுரிமை திருத்தச் சட்டம்: 'உரிமைகள் பறிப்பு' பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்


சிஏஏ சட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை


இந்தியாவில் சிஏஏ செயல்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் சபையும் விமர்சித்துள்ளது அதேபோல இந்த சட்டம் குறித்து சிவில் உரிமைக் குழுக்களும் கவலை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து அமித் ஷா விளக்கம்


நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், "சிஏஏ பற்றி பல்வேறு தளங்களில் குறைந்தது 41 நிமிடங்களாவது விரிவாகப் பேசியுள்ளேன் என்றும், நாட்டின் சிறுபான்மையினர் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார். 


எந்தவொரு குடிமகனின் உரிமைகளையும் பறிக்க இந்த சட்டத்தில் எந்த விதியும் இல்லை. 31 டிசம்பர் 2014 க்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர், இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதே சிஏஏவின் நோக்கமாகும். அவர்களின் துன்பங்களை இந்த சட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டு வர முடியும்" எனக் கூறினார்.


குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்


குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும், இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்காது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க - குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங்


குடியுரிமைச் சட்டம் யாருக்கு? எதற்கு? 


குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டு, 31 டிசம்பர் 2014 க்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆவணமற்ற முஸ்லீமை தவிர்த்து  இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய ஆறு மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.


சிஏஏ கொண்டுவர ஏன் இந்த அவசரம்? எதிர்க்கட்சிகள் கேள்வி


கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த (மார்ச் 11, திங்கள்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டு காலம் அமைதியாக இருந்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது அமல்படுத்துவதன் நோக்கம் என்ன? எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க - CAA Act : இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு வருமா? சிஏஏ பற்றி முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ