கலிபோர்னியா காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 42 எட்டியது!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவியதில் சுமார் 42 பேர் பலியாகியுள்ளனர், 6000 கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன!
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவியதில் சுமார் 42 பேர் பலியாகியுள்ளனர், 6000 கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன!
கலிபோர்னியா மாகாணத்தின் யுபா, மென்டோசினோ உள்ளிட்ட பல நகரங்களில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்து காட்டுத்தீயாக உருவெடுத்தது. பின்னர் பலத்த காற்று காரணமாக தீ அருகாமையில் இருந்த நகரப் பகுதிகளுக்கும் பரவியது.
இதனால் வனப்பகுதியை ஒட்டி வசித்திருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 8000-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாகப் பரவியது. இச்சம்பவத்தில் 6000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த தீ விபத்தால் இதுவரை 2,00,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் இந்த காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது!