தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ; போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அதிகாரம் அமல்!
கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், தீவிரமடையும் டிரக்கர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசரகால அதிகாரங்களை ஜஸ்டின் ட்ரூடோ கோருகிறார்.
கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், தீவிரமடையும் டிரக்கர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசரகால அதிகாரங்களை ஜஸ்டின் ட்ரூடோ கோருகிறார்.
தேசிய நெருக்கடியாக மாறியுள்ள டிரக்கர்கள் தலைமையிலான போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர, தனது தந்தையும் முன்னாள் பிரதமரும் ஆன பியர் ட்ரூடோ வழியை பின்பற்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்க, அவசரகாலச் சட்டத்தை ட்ரூடோ செயல்படுத்துகிறார்.
அவசர அதிகாரத்தை அமல்படுத்துகையில், இராணுவம் நிறுத்தப்படாது என்றாலும் முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்களை அகற்றும் பொருட்டு எதிர்ப்பாளர்களை கைது செய்வதற்கும் அவர்களின் டிரக்குகளை கைப்பற்றுவதற்கும், அத்துடன் போராட்டங்களுக்கு நிதியளிப்பதைத் தடைசெய்வதற்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் ட்ரூடோ கூறினார்.
மேலும் படிக்க | கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா - அமெரிக்கா!
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. டிரக் ஓட்டுநர்கள் முக்கிய சாலைகளை அடைத்துக் கொண்டு போராடுவதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்க கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஒட்டாவாவின் தெருக்களிலும், இரண்டு எல்லைக் கடக்கும் முக்கிய சாலையிலும் பாலத்திலும் இன்னும் ட்ரக்கர் நடத்தும் போராட்டத்தினால், போக்குவரத்து அங்கே முற்றிலும் தடைபட்டுள்ளது.
மேலும் படிக்க | கனடாவில் வலுக்கும் போராட்டம்; ஒடாவாவில் அவசர நிலை பிரகடனம்!
கனடா வரலாற்றில் அமைதிக் காலத்தில் இத்தகைய அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவது இரண்டாவது முறையாகும். 1970 ஆம் ஆண்டு அக்டோபர் நெருக்கடியின் போது ட்ரூடோவின் தந்தை முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவால் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் வர்த்தக கூட்டாளியும் கியூபெக் அமைச்சரும் ஆன பியர் லாபோர்ட் ( Pierre Laporte) என்பவரை பிரிவினைவாதிகள் கடத்திய போது, அவரை மீட்கவும் அப்போதைய பிரதமரும், ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையும் ஆன பியர் ட்ரூடோ அவசர நிலை அதிகாரங்களை பயன்படுத்தினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் நீடிக்கும் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில், அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR