கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?

போராட்டக்காரர்களில் சிலர் முக்கிய போர் நினைவுச் சின்னத்தில் நடனமாடி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை போர் நினைவிடத்தை இழிவுபடுத்தும் செயல் என கனடாவின் ராணுவ ஜெனரல் வெய்ன் ஐர் ( Gen. Wayne Eyre) மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2022, 03:58 PM IST
கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு? title=

கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் உலக நாடுகள் அதனை மீற முடியாமல் தவிக்கின்றன. இந்நிலையில் கனடாவில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு பலமாக எதிர்ப்புகள் கிளம்பின.
இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் நூற்றுக்கணக்கானவர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டின் தலைநகரில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஊடக அறிக்கைகள் சனிக்கிழமை தெரிவித்தன.

ALSO READ | அமெரிக்காவை புரட்டிப் போடும் பனிப்புயல்; நியூயார்க்கில் அவசர நிலை அறிவிப்பு!

முன்னதாக, வெள்ளிக்கிழமை, ட்ரூடோ ஊடகங்களிடம், பேசுகையில், எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறும் என்று கவலைப்பட்டதாகக் கூறினார், ஆனால் இந்த போராட்டம்  கனடா மக்களின் கருத்துக்கள் அல்ல,  நாட்டை பிளவு படுத்தும் சிறிய அளவிலான கூட்டத்தின் செயல் எனக் கூறினார்.

மேலும், போராட்டக்காரர்களில் சிலர் முக்கிய போர் நினைவுச் சின்னத்தில் நடனமாடி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை போர் நினைவிடத்தை இழிவுபடுத்தும் செயல் என கனடாவின் ராணுவ ஜெனரல் வெய்ன் ஐர் ( Gen. Wayne Eyre) மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து ஜெனரல் வெய்ன் (General Wayne Eyre) தனது ட்விட்டர் பக்கத்தில், “ போராட்டக்காரர்கள் தேசிய போர் நினைவிடத்தை இழிவுபடுத்துவதை கண்டு நான் வேதனையடைந்தேன். கனடாவில் முந்தைய தலைமுறைகள்  பேச்சு சுதந்திரம்  உட்பட நமது பல உரிமைகளுக்காகப் போராடி மடிந்தன. சம்பந்தப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்தார்.

அனிதா ஆனந்தும் இந்த சம்பவத்தை கண்டித்து, "இன்று நாம் பார்க்கும் செயல் கண்டிக்கத்தக்கது. போர் நினைவுச் சின்னம் நாட்டின் புனித தலங்கள். அதற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

ALSO READ | பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாச்சாரத்தின் அம்சம்: இம்ரான் கான் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News