சம்பள உயர்வு வேண்டாம் என கனடா மருத்துவர்கள் போராட்டம்!
தங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சம்பளம் கிடைப்பதால், சம்பள உயர்வு வேண்டாம் என கனடா நாட்டு மருத்துவர்கள் போராட்டம்!
தங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சம்பளம் கிடைப்பதால், சம்பள உயர்வு வேண்டாம் என கனடா நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கனடாவில் உள்ள கியூபெக் நகர அரசு அங்கு இருக்கும் மருத்திவர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு அந்நகர மருத்துவர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் கடினமாக உழைக்கும் செவிலியர்கள் மற்றும் பிற அலுவலக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காமல், தாங்கள் மட்டும் ஊதிய உயர்வு பெறுவது நியாயமில்லை என்றும் தங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே வருவாய் கிடைக்கிறது. எனவே அந்தப் பணத்தை நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று ம்ருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக 800 மருத்துவர்கள் இணைந்து கையொப்பமிட்ட கடிதத்தை அரசுக்கு அளித்துள்ளனர். ஊதிய உயர்வுக்காக உலகம் முழுக்க போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், ஊதிய உயர்வு வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.