மத்திய துருக்கியின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கெசேரி குண்டு வெடித்து 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெசேரி நகரில் ராணுவ வீரர்களை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இராணுவ பேருந்தில் ராணுவத்தின் கீழ் நிலையில் ரேங்கில் பணியாற்றி வந்த இந்த வீரர்கள் கமோண்டா தலைமை அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்து செல்வதற்கு அனுமதி கிடைத்தையடுத்து பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தனர். 


இந்த தாக்குதலில் 13 வீரர்கள் பலியானதாகவும், 44 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பொதுமக்கள் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என ராணுவம் கூறியுள்ளது.


துருக்கியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குர்திஷ் பயங்கரவதிகள் மற்றும் ஜிகாதிக்கள் 2016-ம் ஆண்டு தொடர் தாக்குதல்கள் நடத்தி பல உயிர்களை பறித்துள்ளனர். கடந்த வாரம் இஸ்தான்புல் நகரில் நடந்த தாக்குதலில் 44 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.