காஷ்மீரில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டத்தில் சீனாவும், துருக்கியும் பங்கேற்பதில்லை என்று முடுவு செய்துள்ளன. இரு நாடுகளும் தங்களது உற்ற நண்பரான பாகிஸ்தானின் ஆட்சேபனைக்குப் பிறகு ஜி-20 கூட்டத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளன. காஷ்மீர் தொடர்பாக துர்கியே அதிபர் இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். துர்க்கியே காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை எழுப்பியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கிறார். அதே நேரத்தில் காஷ்மீரின் பெரும் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2020 ஆம் ஆண்டில், கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், குறைந்தது 38 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நான்கு தசாப்தங்களில் இந்திய இராணுவத்திற்கும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் (பிஎல்ஏ) இடையே நடந்த மிக மோசமான மோதலாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காஷ்மீரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை இரு நாடுகளும் தங்களது தனிப்பட்ட நலன் கருதி தவிர்த்து வருகின்றன.


பாகிஸ்தானின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா 


காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியாவின் நடவடிக்கை பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால், பாகிஸ்தானின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக கூறியிருந்தது. காஷ்மீரில் நடந்த ஜி-20 மாநாடு பொறுப்பற்ற நடவடிக்கை என இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஜி-20 மாநாட்டின் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை வலுப்படுத்த முயற்சிப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | PM Modi in G7 Summit: 3 நாடுகள்... 40 சந்திப்புகள்... பிரதமரின் சூறாவளிப் பயணத்தின் முழு விபரம்!


இந்தோனேசியா எந்த முடிவும் எடுக்கவில்லை


எனினும், காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் இந்தோனேஷியா பங்கேற்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தோனேசியா கடந்த ஆண்டு ஜி-20 நாடுகளுக்கு தலைமை வகித்தது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் மற்ற கூட்டங்களுடன் ஒப்பிடுகையில் உறுப்பு நாடுகளின் பங்கேற்பு குறைவாக இருக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நாடுகள் இந்தியாவில் உள்ள அந்தந்த தூதரகங்களில் இருந்து தூதர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜி-20 மாநாட்டையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


இதனிடையே, ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீலம் பள்ளத்தாக்கு, லீபா பள்ளத்தாக்கு மற்றும் ஜீலம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்த ஆண்டு இதுவரை நடந்த நான்கு தாக்குதல்களில் 10 ராணுவ வீரர்களும், 7 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் விரைவு படகில் இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், கிளர்ச்சியை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த கருப்பு பூனை கமாண்டோக்கள் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவை தவிர, சிறப்புப் படைகள், இந்திய ராணுவம், துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ₹2000 நோட்டை திரும்ப பெறுகிறது RBI... வெளியான பரபரப்பு தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ