கடந்த 2010-ம் ஆண்டு முதல் சிலரை அமெரிக்க உளவாளிகளை சீனா கொன்றதுடன் பலரை சிறையில் அடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக விசாரணை நடத்தும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-


இந்த நூற்றாண்டில் உளவுத்துறை விதிமீறல் கவலையளிக்கிறது. சி.ஐ.ஏ.,வில் உள்ள சிலர் அமெரிக்காவை ஏமாற்றியுள்ளனர். 


கடந்த 2010 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் உளவு பார்த்த சில சி.ஐ.ஏ., அதிகாரிகளை கொன்றுள்ளது. உளவுபார்த்ததாக 3 பேரை பிடித்த சீனா, அவர்களில் ஒருவரை, மற்ற இருவர் முன் சுட்டு கொன்றது. 
இதன் மூலம், சி.ஐ.ஏ.,வுக்காக பணிபுரிந்தால் தண்டனை தரப்படும் என்ற செய்தியை பரப்ப அந்நாடு முயற்சி செய்தது. பலரை பிடித்து சிறையில் அடைத்துள்ளது. 


இவ்வாறு அவர்கள் கூறினர்.