சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.4 ஆக பதிவு
சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜிங் பிராந்திய பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 5.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலக்கடுத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக பதிவானது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தைத்தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.