மக்கள்தொகையை அதிகரிக்க திட்டம் போடும் நாடு! 30 நாள் சம்பளத்துடன் திருமண விடுப்பு
China Encourages Romance: திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 30 நாள் விடுப்புடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது சீனா
பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த சீன மாகாணங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகின்றன
நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு சீனா தாராளமாக சலுகைகளை வழங்குகிறது. சீன மாகாணங்களில் சில 30 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகின்றன.
சீன மாகாணங்கள் அதன் திருமண விடுப்பு கலாச்சாரத்தை மாற்றியமைக்கின்றன, குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிப்பதற்கான வழிகளைத் தேடும் சீனா, இந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீனாவில் குறைந்துவரும் மக்கள்தொகை, அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
தனது வழக்கமான குறைந்தபட்ச ஊதியத்துடன் மூன்று நாட்கள் திருமண விடுப்புகள் கொடுக்கும் வழக்கத்தில் இருந்து விலகி, இப்போது இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி ஹெல்த் அறிக்கையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!
இளம் தம்பதிகள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுமணத் தம்பதிகளுக்கு இந்த உரிமை மற்றும் சலுகைகள் ஒரு மாத கால விடுப்பு என்பது, சீனாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று சீனா நம்புகிறது.
சீனாவின் சில மாகாணங்கள் 30 நாட்கள் திருமண விடுமுறையை அளித்தாலும், சில மாகாணங்கள் அதை 10 நாட்களாக நிர்ணயித்துள்ளன. கன்சு மற்றும் ஷாங்க்சி மாகாணங்கள் 30 நாட்களைக் கொடுக்கின்றன, ஷாங்காய் 10 நாட்கள் விடுமுறையை வழங்குகிறது. ஆனால், சிச்சுவான் இன்னும் மூன்று நாட்களை மட்டுமே வழங்குகின்றன என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
"திருமண விடுமுறையை நீட்டிப்பது கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்கான பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்" என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. "திருமண விடுப்பு நீட்டிப்பு முக்கியமாக சில மாகாணங்கள் மற்றும் நகரங்களில் ஒப்பீட்டளவில் மெதுவான பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளது," என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015 க்கு இடையில், மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்திய பிறகு சீனாவின் மக்கள்தொகை கணிசமாக குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், சீனாவில் மிகவும் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
1,000 பேருக்கு 6.77 பிறப்பு என்ற விகிதம் 2022இல் பதிவானது. இது, இதற்கு முன், 1961ஆம் ஆண்டுக்கு முன் இருந்த அளவு மக்கள்தொகை விகிதம் ஆகும். அநத காலகட்டத்தில் பஞ்சத்தின் போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஒரு நாட்டின் மக்கள்தொகை மாற்றங்கள் என்பது, அந்த நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது ஆகும்.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கையும் துரிதமாக அதிகரித்து வருகிறது. இதனால், சீனாவில் தொழிலாளர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், அதன் தாக்கம் அதன் பொருளாதாரத்திலும் காணப்படும் என்பதால், சீனா ஒரு குழந்தை கொள்கையை கைவிட்டுவிட்டது.
இருப்பினும் சீன இளைஞர்களிடையே திருமணம் மற்றும் குடும்பம் குறித்த அணுகுமுறை மாறுதல், பாலின சமத்துவமின்மை மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதார சவால்கள் போன்ற பிற காரணிகளும் குழந்தை பிறப்பை மந்தமாக்கியுள்ளது.
மேலும் படிக்க | மாஸ்கோ அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்கலாம்! மேலை நாடுகளை எச்சரித்த புடின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ