ஆப்கானிஸ்தான் நெருக்கடி: காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், மூன்று ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் பறக்கும் விமானத்தில் இருந்து தவறி விழுந்தனர். மேலும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன் அரசோடு (Taliban Govt) நட்புறவாக செயல்படத் தயார் என நமது அண்டை நாடான சீனா அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய தாலிபன்:
சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இந்தியாவின் தலைமையில் திங்கள்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. ஒரு வாரத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் இரண்டாவது கூட்டம் இதுவாகும். ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக நீடித்த போர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு திருப்புமுனையாக அமைந்தது, தலைநகர் காபூலுக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து, அதிபர் மாளிகையை கைப்பற்றினர் மற்றும் ஜனாதிபதி அஷ்ரப் கனி (President Ashraf Ghani) நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 


ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி ட்விட்டரில், "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா. ஆகஸ்ட் 16 அன்று இந்தியாவின் தலைமையின் கீழ் ஆப்கானிஸ்தான் பற்றிய ஒரு விளக்கமும் விவாதமும் நடைபெறும். இதுக்குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார் எனப் பதிவிட்டுள்ளார். 


ALSO READ | Afghanistan crisis: ஆப்கானிஸ்தானில் விமான சேவை ரத்து


ஆப்கானிஸ்தான் நெருக்கடி:
ஆப்கானிஸ்தானில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களில், ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். கந்தஹார், ஹெராட், மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்கள் உட்பட 34 மாகாண தலைநகரங்களில் 25 ஐ அது கைப்பற்றியுள்ளது. இங்கு, காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்துள்ளனர். காபூல் விமான நிலையம் (Kabul International Airport) அமெரிக்க பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது


ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க கொடி அகற்றப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து தூதரக அதிகாரிகளும் நகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், அங்கு ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும் மற்றவர்களும் விமானங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.


கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் குடும்பம் சிக்கலில்:
இங்கு, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் குடும்பம் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருப்பதாக கூறியுள்ளார். தற்போது ரஷித் கான் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் போட்டியில் விளையாடி வருகிறார். 


ALSO READ | ஆப்கானிஸ்தான் இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என அழைக்கப்படும்: தாலிபான்கள்


ஆப்கானிஸ்தானில் மாறிவரும் நிலைமையால் இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அனைத்து எல்லைகளிலும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்று கூறினார்.


நமது எல்லை பகுதிகளில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்:
மூத்த காங்கிரஸ் தலைவர் ட்வீட் செய்து, "ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைகளில் சென்றது நம் நாட்டிற்கு நல்ல அறிகுறி அல்ல. இது இந்தியாவுக்கு எதிராக சீனா-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும். இந்த அறிகுறிகள் நல்லது இல்லை, இப்போது நாம் நமது எல்லை பகுதிகளில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


மத்திய அரசு வட்டாரங்களின்படி, காபூலில் இருந்து இந்திய மக்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு ஏர் இந்தியாவிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காபூலில் இருந்து புது டெல்லிக்கு அவசர நடவடிக்கைக்காக ஏர் இந்தியா ஒரு குழுவை தயார் செய்துள்ளது.


ALSO READ | ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி; ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR