ஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..!!!
தனது எல்லைகளை விரிவாக்கும் பேராசை கொண்ட சீனாவிற்கு, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், சிம்ம சொப்பனமாக இருந்தார் எனலாம்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவை மிகவும் கடுமையாக கையாண்டார். சீனாவிற்கு அவர் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்தார்.
தனது எல்லைகளை விரிவாக்கும் பேராசை கொண்ட சீனாவிற்கு, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், சிம்ம சொப்பனமாக இருந்தார் எனலாம்.
இப்போது அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கப் போகும் ஜோ பைடனும் (Joe Biden) அவரை போலவே சீனாவை கடுமையாக நடத்துவார் என சீனா அஞ்சுகிறது. சீனாவின் ஒரு பெரிய திங் டாங்க நிறுவனம், அமெரிக்காவில் பொறுப்பேற்க உள்ள பிடன் நிர்வாகம் சீனா (China) மீது மேலும் பல புதிய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிக்கக் கூடும் என நம்புகிறது. இது அடுத்த ஆண்டு சீனாவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
ALSO READ | மவுனம் கலைத்த சீனா... ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜி ஜின்பிங்..!!!
சீனாவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆலோசகரும், தற்போது சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியருமான டேவிட் லி டாவோகுய், தென் சீனா மார்னிங் போஸ்டுக்கு அளித்த பேட்டியில், ட்ரம்பை (Donald Trump) போலவே, ஜோ பைடனும், சீனாவிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார் என சீன அரசை எச்சரித்தார். இது சீனாவின் தொழில்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறினார்.
டேவிட் லி டாவுகுய், 'அடுத்த ஆண்டு சீனாவின் வெளியுறவுக் கொள்கை, தொழில் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். இருப்பினும் நல்ல விஷயம் என்னவென்றால், டிரம்ப் நிர்வாகத்துடன் பேசுவதை விட பிடன் நிர்வாகத்துடன் பேசுவது எளிதாக இருக்கும். டொனால்ட் டிரம்பின் சகாப்தம் இன்னும் முடியவில்லை என்று அவர் சீன (China) அரசாங்கத்தை எச்சரித்தார். அவர் 2024 இல் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக முயற்சி செய்யலாம் என அவர் கூறினார்.
ஜோ பிடனின் நிர்வாகத்துடனான உறவை மேம்படுத்தும் என்ற மாயையில் இருந்து சீனா விடுபட வேண்டும் என்று டேவிட் லி டாவோகுய் கூறினார். வாஷிங்டனுடன் கடுமையாக நடந்து கொள்ள தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தார்.
ALSO READ | மோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR