மோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!!

பிலடெல்பியா நீதிமன்றம்,  தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்த  வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனுவை நிராகரித்தது. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2020, 01:15 PM IST
  • பிலடெல்பியா நீதிமன்றம், தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனுவை நிராகரித்தது.
  • அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பிடன் உலகம் மதிக்கும் தலைவர் என்றார்.
  • ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டால் நிச்சயமாக வெளியேறுவேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!!

பிலடெல்பியா நீதிமன்றம்,  தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும் நிறுத்த  வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனுவை நிராகரித்தது. பென்சில்வேனியா மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்கான செயல்முறையை நிறுத்துமாறு ட்ரம்ப்பின் வேண்டுகோளை நிராகரித்த நீதிமன்ற நீதிபதி 21 பக்க தீர்ப்பில் "அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார், வழக்கறிஞரால் அல்ல" என்று எழுதினார்.

பென்சில்வேனியாவில் தேர்தல் முடிவுகளின் சான்றிதழை ரத்து செய்ய கோரி ட்ரம்ப் (Donald Trump) தாக்கல் செய்த மனுவை நீதிபதி குழு நிராகரித்தது. எந்தவொரு தேர்தலையும் நியாயமற்றது என்று கூற முடியாது. நியாயமான தேர்தல்கள் நமது ஜனநாயகத்தின் உயிர்நாடி என்றும் இந்த செயல்முறையை நிறுத்த முடியாது என்றும் நீதிபதி ஸ்டீபனோஸ் பிபாஸ் ஏகமனதாக தீர்ப்பில் எழுதினார்.

நான்கு நாட்களுக்கு முன்னர், டிரம்ப்பின் போட்டியாளரான ஜோ பிடென் (Joe Biden) பென்சில்வேனியாவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், அவருக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு சென்றார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி, நியாயமற்ற  முறையில் தேர்தல் நடந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது மிகவும் தீவிரமான குற்றசாட்டு. அதற்காக, தேர்தலே நியாயமில்லை என்று கூறுவது தவறு. வழக்குப்பதிவு செய்வதற்கு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் தேவை. அதற்கான ஆதாரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | ட்ரம்ப் விதிக்கும் புதிய நிபந்தனை... ஜோ பைடனுக்கு சிக்கல் நீடிக்கிறதா.. !!!

அமெரிக்காவின் (America) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பிடன் உலகம் மதிக்கும் தலைவர் என்றார். பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 78 வயதான பிடனை பாராட்டிய கமலா ஹாரிஸ், அவர் எங்களுக்கு சிறந்த அதிபராக இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். இத்தகைய தலைவர்களை உலகம் மதிக்கும் எனக் கூறினார்

முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டால் நிச்சயமாக வெளியேறுவேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜோ பைடன் அதிபராக உறுதிசெய்யப்பட வாய்ப்பே இல்லை என ட்ரம்ப் உறுதிபட கூறினார். இந்நிலையில், ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ALSO READ |  #DiaperDon: டிவிட்டரில் டிரெண்டாகும் டிரம்பின் tiny desk

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News