சீனாவில் 600 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய காந்த லெசிட்டேஷன் ரெயிலைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு தொழில்நுட்பத் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CRRC Qingdao Sifang Co., லிமிடெட், இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் உள்கட்டமைப்பு வேலைகளை செய்வதற்கு ஒப்பந்தம் மோற்கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தொழில்நுட்ப திட்டமானது 19 அறிவியலாளர்களாலும், வல்லுனர்களாலும் தருவிக்கப்பட்டுள்ளது, பல்வேறு வினவல்களுக்கு மத்தியிலும், கலந்துரையாடல்களின் பின்னரும் பல்வேறு ஆய்விற்கு பின்னர் இத்திட்டத்தினை குறித்த சாத்தியகூறுகளை ஆராய்ந்த பின்னரும் இத்திட்டமானது ஐன., 25 ஆம் நாள் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2016-ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்ட 18 தேசிய முக்கிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும்.


ஜப்பான் சூப்பர்மார்க்கெட்டிங் காந்த லெவிடேஷன் ரயில் 603 கிமீ வேகத்தில் இயங்கும் ரயிலின் சோதனை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதேப்போல் ஜேர்மன் வடிவமைக்கப்பட்ட வாகனம் 505 கி.மீ. வேகத்தில் இயங்கும் ஜேர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த தனது சோதனையை முடித்தது. மேலும் தற்போது இயங்கிவரும் ஷாங்காய், மாக்லெவல் ரயில்களின் இயக்க வேகம் 430 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது சீனா 600 கிமி வேகத்தில் இயங்கும் ரெயிலுக்கான சோதனை ஓட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது சீனாவில் சுமார் 350 கி.மீ. வேகத்தில் இயங்கும் ரெயில்களை கையாள 25,000 கி.மீ. தொளைவில் கட்டமைக்கப்பட்ட பாதைகளை சீனா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!