உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் அடக்குமுறை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லிம்களை  பன்றி இறைச்சி சாப்பிட சீனா கட்டாயப்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீன (China) அரசாங்கத்தின் இந்த அருவெருப்பான செயலுக்கு பலியான சயர்குல் என்பவர் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். பன்றி கறியை சாப்பிட மறுக்கும் உய்கர் முஸ்லிம்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். சின்ஜியாங் பகுதியில் பன்றி வளர்ப்பு தொழிலை மேம்படுத்த சீனா இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது


 இதை அம்பலப்படுத்திய சாயர்குல் சவுத்தபே ஸ்வீடனில் ஒரு மருத்துவர் மற்றும் ஆசிரியர் ஆவார். சமீபத்தில் அவர் தான் எழுதிய புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களுக்கு புனிதமான நாள் என்பதால், சீனா அந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பன்றி கறியை சாப்பிட மறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றும், இதனால், தான் அனுபவித்த கொடுமைகளையும் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | தினமும் அழ பயிற்சி செய்யும் மக்கள்; வட கொரியாவும் அதன் வினோதங்களும்.!!


சீனாவின் அடக்குமுறைக்கு பலியான மற்றொரு பெண் தொழிலதிபர் ஜுமிரேத் தாவூத் ஆவார், அவர் மார்ச் 2018 இல் உருமேகியில் கைது செய்யப்பட்டார். தனது கணவரின் நாடான பாகிஸ்தான் (Pakistan) நாட்டுடன் தனக்கு உள்ள தொடர்புகள்  குறித்து இரண்டு மாதங்கள் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.


விசாரணையின் போது தான் கழிப்ப்றைக்கு செல்லும் போது கூட தனை கைகள் கட்டப்பட்டிருக்கும் என்றும், ஆண் அதிகாரிகள் கழிப்பறைக்கு கூட உடன் வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


பன்றி இறைச்சி சாப்பிடுவது பற்றி கூறிய தாவூத், பன்றி இறைச்சி உய்கர் முஸ்லிம்களின் (Uyghur Muslims) முகாமில் பரிமாறப்படுகிறது என்று கூறினார். அவர், 'நீங்கள் ஒரு வதை முகாமில் அமர்ந்திருக்கும்போது, ​​எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. உயிருடன் இருக்க நாங்கள் கொடுக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட வேண்டும். சிஞ்சியாங்கில் சீனா வேண்டுமென்றே பன்றி இறைச்சி தொழிலை ஊக்குவித்து வருவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் அவர் கூறினார்.


ALSO READ | கொரோனா விதியை மீறினா கொன்று விடுவேன்.. கண்டதும் சுட கிம் ஜாங் உன் உத்தரவு...!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR