பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை `இறக்குமதி` செய்யும் சீனா!
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா பயன்படுத்துகிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பினும், சுயநலமே குறியாக கொண்ட சீனா இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. சீனா, பாகிஸ்தானில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் சீனாவின் வஞ்சகமான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.
CPEC திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சீனா இப்போது இஸ்லாமிய நாட்டிலிருந்து பெண்களைக் கடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், சீனர்கள் பாகிஸ்தானுக்கு வந்து பிற மதத்தைச் சேர்ந்த மைனர் பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக ஒரு அறிக்கை கூறியது.
திருமணம் என்ற பெயரில் பெண்கள் கடத்தல்
உலக நிபுணர்கள், சீனா திருமணம் என்ற பெயரில் பெண்களை கடத்துவதாக கூறுகிறது. அதைத் தடுக்க பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை. இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் சீனா தனக்கு கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அமைதியாக இருக்கிறது, மேலும் சிறுமிகளை கடத்துவதற்கும் உதவுகிறது. சீனர்கள், போலி வணிக ஆவணங்கள் மூலம், சிறுமிகளை தனதுநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுகிறது. கடத்தப்படும் சிறுமிகளுக்கு சுமார் 3500 டாலர்கள் முதல் 5000 டாலர்கள் வரை பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்தியாவுடனான மூன்று போர்கள் மக்களின் துன்பம், வறுமையை அதிகரித்ததுடன் வேலையின்மை என பல பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வந்துள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தவறை ஒப்புக் கொள்வதுபோல, பாகிஸ்தானின் இன்றையப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மேஜையில் அமர்ந்து காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் ஷேபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ