தைவானிற்கு சீனா தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வரும் நிலையில், தைவானுக்கும் சோமாலிலாந்திற்கும் (Somaliland) இடையில் ராஜீய உறவுகள் வலுப்படுவதை சீனா விரும்பவில்லை. சோமாலிலாந்திற்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் (Indian Ocean) சீனாவுக்கு ஒரு இராணுவத் தளம் உள்ளது என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | நேபாள பிரதமர் ஒளிக்கு நீடிக்கும் அரசியல் நெருக்கடி... வலுவடையும் எதிர்ப்பு..!!!


புதுடெல்லி ( New Delhi): ஆப்பிரிக்க (Africa) நாடான சோமாலிலாந்து (Somaliland ) சீனாவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 'ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா' (Horn of Africa) என்று அழைக்கப்படும் இந்த பகுதிக்கு அருகில் சீனாவுக்கு (China) ஒரு இராணுவத் தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இப்போது சோமாலிலாந்து தைவானுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் சீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் தனது ராணுவ தளத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சீனா அஞ்சுகிறது.


சோமாலிலாந்தின் எல்லையில் உள்ள ஜிபூட்டியில் (Djibouti) பல நாடுகளுக்கு ராணுவ தளங்கள் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் சீனாவிற்கு இந்த பகுதியில் இராணுவத் தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் சீனா(China) தனது தளத்தை 2017 இல் உருவாக்கியது, அங்கிருந்து சூயஸ் கால்வாயிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை சீனா கண்காணிக்க முடியும்.


சோமாலிலாந்துடனான ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுகையில், தைவானின் வெளியுறவு அமைச்சகம், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தைவானைப் பொறுத்தவரை, அந்நாடு சோமாலிலாந்தில் தனது பிரதிநிதி அலுவலகத்தை அமைக்கும். கூடுதலாக, இரு நாடுகளும் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை பாதுக்காக்கும் எண்ணத்தை கொண்டுள்ளதாக தைவான் கூறியுள்ளது.


சோமாலிலாந்து வெளியுறவு அமைச்சர் யாசின் ஹாகி மஹ்மூத் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தைவானுக்குச் சென்றார். இந்த ஒப்பந்தம் குறித்து தைவான் அதிபரும் சோமாலிலாந்து அதிபரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


ALSO READ | சீன எல்லை பிரச்சனைக்கு பின் முதல் முறையாக ராம் நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி...!!!


சோமாலிலாந்து வடமேற்கு சோமாலியாவின் ஒரு பகுதி ஆகும். ஆனால் தான் சுதந்திர நாடு என கூறி வருகிறது. இது உலகில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜிபூட்டி, சுவீடன் போன்ற சில நாடுகளுடன் உறவு உள்ளது.


ஆப்பிரிக்க (Africa) நாடுகளில், எசுவாத்தினி(Eswatini)  மட்டுமே தைவானுடன் ராஜீய முறையில் உறவு வைத்துள்ளது. புர்க்கினா பாசோ (Burkina Faso) என்னும் மேற்கு ஆப்பிரிக்க நா 2018 இல் தைவானுடனான உறவுகளை துண்டித்து கொண்டது. தைவான் 15 நாடுகளுடன் முறையான உறவைக் கொண்டுள்ளது. அதோடு அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவை பராமரித்து வருகிறது. தைவானின் பாஸ்போர்ட் உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தைவான் மக்களுக்கும் விசாவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மில்லியன் தைவானிய மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.