பியோங்யாங்:  சீனாவின் மூன்று மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வேண்டாம் என வட கொரியா நிராகரித்துள்ளது. மேலும், அவற்றை  அதிக தேவை உள்ள நாடுகளுக்கு வழங்கி கொள்ளுமாறு கூறியதாக யூனிசெஃப்  தெரிவித்துள்ளது.  உலகில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலத்திலிருந்தே வடகொரியா கடும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வரை வடகொரியாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டவர்கள் என 32,291 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட 'கோவேக்ஸ்' திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த 'சினோவாக்' தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன.  இந்நிலையில், சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


தடுப்பூசி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-v தடுப்பூசியை வடகொரியாவுக்கு வழங்க ரஷ்யா பல முறை முன்வந்ததுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் கடந்த ஜூலை மாதம் தெரிவித்துள்ளார்.


ALSO READ  Thorium instead of uranium: நீரில்லா அணு உலையின் சோதனைகளைத் தொடங்கும் சீனா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR