கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 630 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் சீனாவின் இறப்பு எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் 69 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 2,447 பேர் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 817-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.