”நமக்குள்ளும் ஹீரோ உண்டு” - 5-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்
சீனாவில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை இளைஞர் ஒருவர் லாவகமாகப் பிடித்துக் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் என்ற நகரில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
அப்போது, கீழே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அந்த இளைஞரின் பெயர் ஷென் டோங் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று?
இதனைத் தொடர்ந்து அக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் கால்களிலும், நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் குழந்தையின் நிலை சீராக உள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடந்த எதுவும் தனக்கு ஞாபகத்தில் இல்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இந்தக் காட்சியை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சியை ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் உண்டு என சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பேனா சின்னமா?... ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்யுங்கள் - அரசுக்கு விஜயகாந்த் அட்வைஸ்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ