வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் (US Covid Spike) மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக அளவில்  கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.66 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த தொற்று காரணமாக இதுவரை 41.99 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பல நாடுகளில் நான்காவது அலைக்கு டெல்டா மாறுபாடு (Delta Variant) காரணமாகிவிட்டது. அத்தகைய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.


மக்கள் வீடுகளை இழந்து வருகின்றனர்


ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவில் (America) மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிடலாம். அங்கு முறையற்ற முறையில் நாட்டில் குடிபுகுவதற்கான நாடு தழுவிய தடை முடிவடைகிறது. இந்த முடிவால் மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். டெல்டா மாறுபாடு நாட்டில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் சொத்துக்களின் விலையும் வாடகை வீடுகளின் வாடகையும் பாதிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: அமெரிக்காவில் தீயாய் பரவும் கொரோனா; 4ஆம் அலை தொடங்கி விட்டதா..!!


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) வியாழக்கிழமை 11 மாத காலம் பழமையான உத்தரவை நீட்டிக்குமாறு காங்கிரசிடம் கோரினார்.  இந்த விதியின் கீழ், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு ஒரு பெரிய பட்ஜெட்டை செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனநாயகக் கட்சியினரிடையே குழப்பம்


சில ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் இந்த முடிவை எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் வட்டாரங்களின்படி, பல ஜனநாயகக் கட்சியினர் வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்காக ஊரை விட்டு வெளியேற திட்டமிட்டனர். இதனால் கட்சி இந்த மசோதாவை நிறைவேற்றுவது கடினமானது.


வாஷிங்டன் டிசி போன்ற சில அமெரிக்க மாகாணங்கள், தங்கள் மாகாணத்திற்கு தற்காலிக வெளியேற்றப் பாதுகாப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. இப்போது, இரண்டாவது சுற்று நிதி உதவியில், ​​21.5 பில்லியன் டாலர் தொகை இதுவரை செலவிடப்படவில்லை. எனவே முதல் தவணை செலவழிக்கப்படும் வரை அடுத்த நிதி வெளியிடப்படாது.


ALSO READ: Delta variant: சிக்கலில் அமெரிக்க பொருளாதாரம், அதிருப்தியை சந்திக்கும் ஜோ பைடன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR