இந்தியா எதிர்காலத்தில் நிச்சயம் உலகின் முன்னணி நாடாக மாறும்! எலோன் மஸ்கின் ஆருடம்
Demographics is destiny: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று சொல்லும் எலோன் மஸ்க், எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?
புதுடெல்லி: குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் திருமணம் தாமதமாவது என வளர்ந்த நாடுகள் சந்திக்கும் கால மாற்றங்கள், முதுமை மற்றும் மக்கள்தொகை குறைப்பு போன்ற மோசமான பிரச்சனைகளில் எதிரொலிக்கின்றன மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘மக்கள்தொகை என்பது...’ என இந்தியா தொடர்பான தனது கருத்தை எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அறிக்கையின்படி, 142.86 கோடி மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முன்னேறி வருகிறது.
மக்கள் தொகை குறைந்து வரும் சீனாவில் தற்போது வயதானவர்களின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.நாட்டில் வயதானவர்களின் மக்கள்தொகை அதிகரிப்பது, அதிகாரிகளுக்கு ஒரு சவாலாகவும் கனவாகவும் உள்ளது, இது இந்தியாவிற்கு ஒரு வரமாக மாறும்.
மேலும் படிக்க | மக்கள்தொகையை அதிகரிக்க திட்டம் போடும் நாடு! 30 நாள் சம்பளத்துடன் திருமண விடுப்பு
தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கைகளின்படி, மக்கள்தொகை அதிகரிப்பதில் இந்தியாவுக்கு பெரிய அனுகூலம் உல்ளது. இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 50% மக்கள்தொகை 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது மிகவும் நல்ல செய்தி. இந்த அளவு இளைஞர்களின் எண்ணிக்கை உலகின் வேறு எந்த நாடுகளிலும் இல்லை.
தொழில்நுட்பத் துறையில் வித்தகரான எலோன் மஸ்க், ஒரு நாட்டின் மக்கள்தொகை அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று தெரிவித்தார். நீண்ட காலமாக வயதான மக்கள்தொகைக்கு எதிராக போராடும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் எதிர்கொள்ளும் ஒரு பயங்கரமான பிரச்சனை இது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நாடுகளில் மக்கள்தொகை எண்ணிக்கையில், இளையவர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
எலோன் மஸ்க், மக்கள்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்திய ஒரு டிவிட்டர் பதிவில் கருத்துத் தெரிவித்த அவர், பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றும், இது "மக்கள்தொகையின் விதி" என்றும் கூறினார்.
உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்டிருக்கும் நாடான இந்தியா, எதிர்காலத்தில் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறும் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள்தொகையைத் தக்கவைக்கும் பூமியின் திறன் குறைந்து வருகிறது மற்றும் கடந்த ஒரு தசாப்தத்தில் காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது. தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க், வள பற்றாக்குறை பிரச்சனைக்கு எதிராக போராடும் பொருட்டு செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதைப்பற்றி பேசுவதோடு மட்டுமின்றி, அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன், மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதிக சுமைகள் மற்றும் பயணிகளுடன் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் உலகின் மிகப்பெரிய ராக்கெட் 'ஸ்டார்ஷிப்' ஐ சோதனை செய்தது. ராக்கெட் கப்பலில் இருந்து பிரித்தெடுக்கும் போது நடுவில் வெடித்தாலும், முதல் விமான சோதனையில் ராக்கெட் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நோவக் ஜோகோவிச் மீண்டும் அதிர்ச்சி தோல்விக்கு காரணம் என்ன? கவலையில் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ