குழந்தை பிறந்தால் லட்சக்கணக்கில் உதவித் தொகை! சலுகைகளை அள்ளி வழங்கும் தென் கொரியா!

இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனையுடன் போராடி வருகிறது. அதே சமயம் ஆசியாவில் சில நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக இளம் வயதினர் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2023, 01:11 PM IST
  • பிரான்சிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
  • பெண்களுக்கு குழந்தை பிறக்கும் போது அனைத்து சுகாதார வசதிகளையும் செய்து தருகிறது.
  • மக்கள் தொகை குறைந்து வருவது நாட்டிற்கு பெரிய நெருக்கடி.
குழந்தை பிறந்தால் லட்சக்கணக்கில் உதவித் தொகை! சலுகைகளை அள்ளி வழங்கும் தென் கொரியா! title=

இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலகில் பல நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அத்தகைய நாடுகளில், ஆசியாவின் ஜப்பான் மற்றும் தென் கொரியா குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது. பிறப்பு விகிதம் குறைந்து வருவதே இதற்கு முக்கியக் காரணம். நம் நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தென் கொரியா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென் கொரிய அரசு 2022 ஆம் ஆண்டு முதல் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு  இந்திய ரூபாய் மதிப்பில், ₹1.2 லட்சத்தை வழங்குகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது தவிர பல விதமான சலுகைகளை அள்ளி வழங்குகிறது

குழந்தையின் செலவை அரசே ஏற்கும்

பிரான்சிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு குழந்தை பிறந்ததற்கு பணம் வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் கொடுக்கப்பட்ட தொகை பிரான்ஸை விட அதிகம். தென் கொரியாவின் அரசாங்கம் 1 வயது குழந்தைகளின் பராமரிப்புக்காக சுமார் ₹43000 அதாவது 528 டாலர்களை வழங்குகிறது. இதற்குப் பிறகு, குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 264 டாலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது இந்திய பணத்தில் ₹21000. 2024-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை தொடர்வது குறித்து அரசு ஆலோசனை செய்துள்ளது. இதற்குப் பிறகு, 1 வயது வரையிலான குழந்தைக்கு 755 டாலர்கள் அதாவது 61,968 ரூபாய் கிடைக்கும். இதற்குப் பிறகு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு, நீங்கள் $ 377 அதாவது ₹30,943 கிடைக்கும்.

மேலும் படிக்க | தலையணை உறைக்குள் இருந்த மலைப்பாம்பு... பெண்ணுக்கு நேர்ந்த பகீர் அனுபவம்!

அதிக அளவில் செலவு செய்யும் தென்கொரிய அரசு 

இதுமட்டுமின்றி தென்கொரியா அரசு அங்குள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கும் போது அனைத்து சுகாதார வசதிகளையும் செய்து தருகிறது, குழந்தையின்மை சிகிச்சைக்கும் அதே செலவை அரசே ஏற்கும். இது தவிர குழந்தைகளை பாதுகாப்பாக பெற்றுக் கொள்வதற்கான அனைத்தை ஏற்பாடுகளும் அரசால் மேற்கொள்ளப்படும். ஆரம்ப நிலையில் குழந்தைகளின் கல்வியிலும் அரசு அதிக முதலீடு செய்யும். அதே நேரத்தில் குழந்தையின் 7 வயது வரை ரூ.31 லட்சம் செலவிடப்படும். உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடு தென் கொரிய என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தொகை குறைந்து வருவது நாட்டிற்கு பெரிய நெருக்கடியை உருவாக்கக்கூடும்.

மேலும் படிக்க | கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை "மேம்பட்ட" ICBM சோதனையை நடத்தியது ரஷ்யா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News