காங்கோ: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம், 1 குழந்தை பலி
![காங்கோ: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம், 1 குழந்தை பலி காங்கோ: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம், 1 குழந்தை பலி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2016/11/08/110261-un-flag.jpg?itok=OTYLoxO3)
காங்கோ நாடு உள்நாட்டு கலவரம் காரணமாக கடுமையாக பாதிப்படைத்துள்ளது. அங்கு ஐ.நா. அமைதிப்படையின் 18 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை குறிவைத்து ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், கோமா நகரில் இன்று காலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 32 அமைதிப்படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவம் மசூதிக்கு அருகில் நடந்துள்ளது. அதில் இருந்தவர்கள் இதுப்பற்றி கூறுகையில்- சுற்றிலும் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். மேலும் சில வீரர்களும் இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் இதைப்பற்றி ஆக்கபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.