உலகிற்கு சீனா பரிசாக அளித்த கொரோனாவால், இப்போது அனைத்து நாடுகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி சிக்கி தவித்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ள கொரோனா எவரெஸ்ட் சிகரத்தையும் சென்றடைந்தது. இது குறித்து செய்திகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. 


இந்நிலையில், நேபாள (Nepal) நாட்டில் இருந்து மலை ஏறுபவர்கள் மூலம், சீன தரப்பில் இருந்து மலை ஏறுபவர்களுக்கு, தொற்று பரவலாம் எனவும், அதனால், தொற்று பரவலை தடுக்க, எவரெஸ்ட் மலையில், எல்லைகளை பிரித்து காண்பிக்கும் வகையிலான கோடு வரையப்படும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  


ALSO READ | கழிப்பறைக்கு போன பெண் கையில் குழந்தையோடு வந்த பகீர் சம்பவம்!


 


நேபாள நாட்டில், உலகிலேயே மிக உயரமான மலைச்சிகரமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க, உலகெங்கிலும் இருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் அங்கு செல்வார்கள். 


மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், அதிக அளவிலான மலை ஏறும் வீரர்கள், எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்று சாதனை படைக்க மலை ஏறுவார்கள். 


கடந்த ஆண்டு கொரோனா பரவல் (Corona Virus) தொடங்கியதை அடுத்து, உலகெங்கிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட,  நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து என கிட்டத்தட்ட  உலக இயக்கம் ஸ்தபித்தது எனலாம். 


அந்நிலையில், நேபாள அரசும், எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏற, அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலா துறையை சார்ந்திருந்த பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.


நேபாளத்திலிருந்து மலையை ஏறும் ஏறுபவர்களிடையே பல கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா; நார்வே மலையேற்ற வீரருக்கு தொற்று


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR