கொரோனா வைரஸ்: சீனாவில் இறப்பு எண்ணிக்கை 425 ஆக உயர்வு!
கொரோனா வைரஸால் சீனாவின் இறப்பு எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது, மேலும் மொத்த பத்திப்பு எண்ணிக்கை 20,438 ஆக உள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கொரோனா வைரஸால் சீனாவின் இறப்பு எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது, மேலும் மொத்த பத்திப்பு எண்ணிக்கை 20,438 ஆக உள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் வுஹானில் படித்த இரண்டு மாணவர்கள், தொற்றுநோயின் அறிகுறி கொண்டு சோதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மீதான சோதனை நேர்மறையான தகவல்களை அளித்தது. திரிசூர் மற்றும் ஆலப்புழாவில் இருந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவருடன் தற்போது மூன்றாவது நபர் காசர்கோடு பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளார்.
சீனா உட்பட நாவல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணித்த மொத்தம் 2,239 பேர் அடையாளம் காணப்பட்டு மாநிலத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2,155 பேர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர், 84 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது.