பீஜிங்க்: சமீபத்திய செய்திகளில், சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் அட்டைப்பெட்டிகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பெட்டிகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியான்ஜினில் உள்ள தாகியோடாவோ ஃபுட் கம்பனி லிமிடெட் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் கோவிட் -19 க்கு சோதனை செய்யப்படுவதாகவும் இப்பகுதி நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐஸ்கிரீமிலிருந்து யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.


இந்த ஐஸ்கிரீம்களின் (Ice Cream) தயாரிப்பில் நியூசிலாந்தின் பால் பவுடர் மற்றும் உக்ரைனிலிருந்து வரும் மோர் தூள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


சுமார் 29,000 அட்டைப்பெட்டிகளில் இருந்த ஐஸ்கிரீமின் மொத்த பேட்சும் விற்பனைக்கு தயாராக இருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


தியான்ஜினில் சுமார் 390 அட்டைப்பெட்டிகளில் இருந்த ஐஸ்கிரீம்கள் விற்கப்பட்டுள்ளன. அவை யாருக்கெல்லாம் விற்கப்பட்டன என்பதை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் ஐஸ்கிரீம் விற்பனை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.


ALSO READ: சீனாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்களுக்கு நச்சு குடிநீரை வழங்கல்..


இதற்கிடையில், சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 109 பெருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள், தேசிய தலைநகர் பெய்ஜிங்கிற்கு (Beijing) அருகில் உள்ளது வடக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.


சனிக்கிழமையன்று, சீன (China) சுகாதார ஆணையம் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து மீண்டு கொரோனா வைரஸ் நாட்டிற்குள் வந்துள்ளதாக குற்றம் சாட்டியது.


தற்போது, ​​கொரோனா வைரசால் சீனாவில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை 4,653 ஆகவும், மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,227 ஆகவும் உள்ளன.


COVID-19 இன் முதல் நோயாளி பற்றி 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் மத்திய நகரமான வுஹானில் (Wuhan) இருந்து கண்டறியப்பட்டது.


இந்த நோய் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சீன அரசாங்கம் கூறியுள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகள் மற்றும் பிற உணவுப் பொருட்களில் இவை இருப்பதை தங்கள் நாடு கண்டறிந்ததாகவும் சீன அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், சீனாவின் இந்த கூற்றுகளை பல நாடுகளின் விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர்.


ALSO READ: COVID Vaccination Drive இந்த மாநிலங்களில் நிறுத்தப்பட்டது: காரணம் இதுதான்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR