ஜெனீவா, சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் (Coronavirus) ஒருபோதும் விலகிச் செல்லாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) புதன்கிழமை எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாவல் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள சில நாடுகள் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸை (Coronavirus) ஒருபோதும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்று WHO கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவின் (China) வுஹானில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியது, அதன் பின்னர் 4.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உலகளவில் கிட்டத்தட்ட 300,000 பேரைக் கொன்றது.


முதன்முறையாக மனிதனிடம் இருந்து மனிதனுக்கு ஒரு வைரஸ் (Coronavirus) பரவுகிறது. எனவே நாம் எப்போது அதை வெல்வோம் என்று கணிப்பது மிகவும் கடினம் என்று  உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் (Michael Ryan) கூறினார்.


ஜெனீவாவில் நடந்த ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் (Michael Ryan) கூறுகையில், "இந்த வைரஸ் நமது சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும் தவிர, இந்த வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்று கூறினார். அதாவது "எச்.ஐ.வி நீங்கவில்லை, ஆனால் நாங்கள் அந்த வைரஸைப் புரிந்துகொண்டோம்" என்றார்.


கொரோனா வைரஸ் (Coronavirus) நெருக்கடி தொடங்கியதிலிருந்து மனிதகுலத்தை காப்பதற்கு ஏதேனும் ஒரு வகையான ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைத்தும் தடை செய்யப்பட்டன. ஆனால் பல நாடுகள் வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் ஊரடங்கில் இருந்து வெளியேற விரும்புகின்றன. 


ஆனால் உலக சுகாதார அமைப்பு (World Health Organization)  எச்சரித்தது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தூண்டாது என்று எந்த உத்தரவாதம் அளிக்க வழி இல்லை. இன்னும் வெகுதூரம் போகவேண்டும். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பாதையில் "நீண்ட, நீண்ட தூரம் செல்ல" வேண்டி உள்ளது என்று ரியான் (Michael Ryan) மேலும் கூறினார். 


நாடுகள் நிச்சயமாக ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எங்களை பொறுத்த வரை எந்த நாட்டிலும் எச்சரிக்கை முடிந்தவரை மிக உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்றார்.


ஆனால் வைரஸை வெல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் தடுப்பூசி மிக முக்கியமானது. அதன்மூலம் மனிதகுலத்தை காப்பாற்ற சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார். இது உலகிற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்று ரியான் (Michael Ryan) கூறினார்.