கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் கியூபாவில் (Cuba) கடும் உணவுப் பஞ்சம், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. உணவு கிடைக்காமல்  மக்கள் வீதிக்கு வந்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கியூபா (Cuba) நாட்டில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் பிரச்சனையுடன் கூடவே,  உணவுப்பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும்  கடும் தட்டுப்பாடு நிலவுவதால், விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. 


இந்நிலையில் நெருக்கடியை தீர்க்க சர்வதேச எல்லைகளை திறந்து விட்டுள்ளது கியூபா (Cuba). அங்கே யார் வேண்டுமானாலும் உணவு, மருந்து பொருட்களை கொண்டு வரலாம், அதற்கு வரியோ சோதனையோ கிடையாது என்று அறிவித்துள்ளது கியூபா அரசு.  ஒரு நாடு பரிசோதனை இல்லாமல் தனது எல்லைகளை திறந்து விடும் நிலை ஏற்பட்டது என்றால், அதன் ஆளுமை முடிந்து விட்டது என்று பொருள். தனது  ஆளுமை இழந்து விட்டது கம்யூனிஸ அரசு. 


ALSO READ | ‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’; உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்


உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்குமான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். கம்யூனிஸ நாட்டில்,  போராட்டங்கள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள் அங்கு சட்டவிரோதம்  என்ற போதிலும் அங்கு போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சோவியத் யூனியன் (Soviet Unioin) உடைந்ததை அடுத்து உருவான தீவு தற்போது, மிகப்பெரிய சமூக பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. அத்துடன் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.


கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் பரவல், உணவு பஞ்சம், மருந்துகள் மற்றும் பிற தேவைகளின் கடும் பற்றாக்குறை போன்ற மோசமான நிலைமைகள் ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் ஒன்றாகும்.  கியூபாவில் 1950 களில் சர்வாதிகாரம் தொடங்கியதிலிருந்து அங்கு முதன் முதலாக மிகப் பெரிய அளவிலான போராட்டம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ‘கடிதம் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா’; உதவி கோரி கதரும் தென்னாப்பிரிக்க இந்தியர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR