‘கடிதம் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா’; கதரும் தென்னாப்பிரிக்க இந்தியர்

இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை, என  தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளையை சேர்ந்த மருத்துவர் ஜீ தொலைகாட்சிக்கு (Zee News) கடிதம் அனுப்பியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 16, 2021, 10:08 AM IST
‘கடிதம் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா’;  கதரும் தென்னாப்பிரிக்க இந்தியர் title=

புதுடெல்லி: தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து,  நாடு முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் என தென்னாப்பிரிக்கா கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. நீதிமன்ற வழக்கை அவமதிப்பு வழக்கில், ஜுமா தனது 15 மாத சிறைத்தண்டனை அனுபவிக்கத் தொடங்கிய பின்னர் ஜூலை 7 ஆம் தேதி வன்முறை, கலவரம் தொடங்கியது. இந்த கலவரத்தில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய சமூகத்திற்கு உதவு வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. டர்பனில் உள்ள ஒரு இந்திய வம்சாவளி மருத்துவர், ஜீ நியூஸுக்கு (Zee News) எழுதிய கடிதத்தில், பிராந்தியத்தில் இந்திய மருத்துவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையை  கூறி, இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை என பதை பதைக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், அவர் எழுதியிருப்பதாவது:- 

நான் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் (Durban) பணிபுரியும் ஒரு மருத்துவர். உள்நாட்டு கலவரம் மற்றும் போரில் இந்திய சமூகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆயுதங்கள் குவிந்துள்ளன. அனைத்து உணவு பொருட்களுக்கான கடைகள் மால்கள்  எரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிலையங்கள் இயங்கவில்லை.  தகவல்தொடர்பு நெட்வொர்க் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்து வருதால, தகவல் தொடர்பும் மெதுமெதுவாக பாதிக்கப்பட்டு வருகிறது., இதனால்  நாங்கள் தகவல் கூட பரிமாற முடியாத நிலையில் உள்ளோம்.

ALSO READ | Afghanistan: பரிதாப நிலையில் பெண்கள், போராளிகளுக்கு அடிமைகளாகும் பரிதாபம்

"நானும் மற்ற மருத்துவர்களும் மருத்துவமனைக்கு சென்று பணியாற்ற முடியவில்லை.  COVID தொற்றுநோயால்  நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. எங்களுக்கு உதவி தேவை. தென்னாப்பிரிக்காவின் டர்பன் குவா ஜூலு நடாலில் (Durban Kwa Zulu natal, South Africa) இனப்படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவை  எதுவும் இல்லாமல் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். தயவுசெய்து  எங்களுக்கு உதவுங்கள். எங்கள் நெட்வொர்க் மற்றும்  தக்வல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்படும் முன் எங்களை காப்பாற்றுங்கள். நான் என் நாட்டை நேசிக்கிறேன், ஆனால் கெட்டவர்கள் எங்களை மீது தாக்குதல் நடத்த நல்லவர்களைப் பயன்படுத்துகிறார்கள். தயவுசெய்து உதவுங்கள்.
 

இப்படிக்கு
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர். "

- இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளது. 

ALSO READ: மீண்டும் தலிபான்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்; அரசு கூறுவது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News