ஹவானா: கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார். 


கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாடினார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டு இருந்தார். இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.


ஃபிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், கியூபாவின் அதிபருமான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். கியூபாவின் அரசுத் தொலைக்காட்சியும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.