ஜார்ஜ் ஃபிலாய்டின் மரண விவரம்: வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு அமல்....
ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் தொடர்பான எதிர்ப்புக்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு அமல்...
ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் தொடர்பான எதிர்ப்புக்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு அமல்...
மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரின் மரணத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், வாஷிங்டன் டி.சியில் நகர அளவிலான ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று மேயர் முரியல் பெளஸர் அறிவித்தார். பெருநகர காவல்துறைக்கு உதவி செய்வதற்காக DC National Guard பிரிவையும் பணியமர்த்துவதாக நகர மேயர் அறிவித்தார். ஃபிலாய்ட் கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மேயர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மினியாபோலிஸில், ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரின் மரணத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் வாஷிங்டன் டி.சியில், நகர அளவிலான ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று மேயர் முரியல் பெளஸர் அறிவித்தார். பெருநகர காவல்துறைக்கு உதவி செய்வதற்காக DC National Guard பிரிவையும் பணியமர்த்துவதாக நகர மேயர் அறிவித்தார். ஃபிலாய்ட் கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மேயர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வெள்ளை மாளிகையின் அருகே பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால், நகரில் சட்டம் ஒழுங்கு மோசமானது.
இந்த போராட்டங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு, பாசிச எதிர்ப்பு குழுவான ஆண்டிஃபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் என்று கூறினார். ஆண்டிஃபா என்பது அமெரிக்காவில் இயங்கும் இடதுசாரி, பாசிச எதிர்ப்பு அரசியல் ஆர்வலர்களின் இயக்கம். தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட தன்னாட்சி ஆர்வலர் குழுக்களால் ஆன அண்டிஃபா, நேரடியாக களத்தில் இறங்கி போராடும் அமைப்பு.
ஃப்ளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து போலீசாரின் கட்டுக்கடங்கா மிருகத்தனத்தைப் பற்றி நாடு தழுவிய வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் எழுந்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது, காவல்துறை அதிகாரி ஒருவர், ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்கால் வைத்து அழுத்தியதால், அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது, வீடியோவில் தெளிவாகக் காணப்பட்டது.
நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை கண்டித்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், "வெளியில் இருந்து வந்த தீவிரவாதிகளும்ம் கிளர்ச்சியாளர்களும்" இந்த மரணத்தை சாக்கு வைத்து அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
"வெளியில் இருந்து வந்த தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் குழுக்கள் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக, வன்முறைகளை மேற்கொள்வதற்கு நிலைமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன" என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற எத்தனை பேர் ஆண்டிஃபாவைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், ஃபிலாய்டின் மரணத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மே மாதம் 25ஆம் தேதி திங்கள்கிழமையன்று மோசடி செய்யப்பட்டதாக வந்த அழைப்பின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தபோது நடைபெற்றதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் ஒருவர், காருக்குள் அமர்ந்திருப்பதை போலீசார் பார்த்தார்கள்.
காருக்குள் இருந்த அவரை இரண்டு அதிகாரிகள் வெளியே வரும்படி கூறியபோது, சந்தேக நபர் அவர்களை "உடல் ரீதியாக எதிர்த்தார்" என்று காவல்துறை கூறுகிறது. "மருத்துவ மன உளைச்சலுக்கு ஆளாகியதாகத் தோன்றிய" ஃப்ளாய்டை கைது செய்து கைகளில் விலங்கு மாட்டியதாகவும், சில மணி நேரம் கழித்து அந்த நபர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகவும், என்று போலீசார் கூறுகின்றனர்.
- மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்.