World Bizarre News: நம் திரைப்பட நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, முகத்தை அழகுப்படுத்தும் வகையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. நடிகைகள் கேமராவில் தங்களது முகத்தேற்றத்திற்காக செய்வதாக கூறுவார்கள். ஆனால், ஒரு சிறுமி தனது முகத்தோற்றத்தை அழகுப்படுத்த வேண்டும் என கூறி பல கோடிகள் செலவழித்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது 13 வயதில் இருந்து பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்திருக்கும் இந்த சீன சிறுமிக்கு தற்போது 18 வயதாகிறது. Zhou Chuna என்ற அந்த சிறுமி, தனது 13 வயதில் தொடங்கில் 10 கண்ணிமை அறுவை சிகிச்சைகள், பல்வேறு எலும்பு ஷேவிங் சிகிச்சைகள் மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நடைமுறைகளை தற்போது வரை மேற்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மொத்த சிகிச்சைகளுக்கும் ரூ.4.6 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது. இவை அனைத்திற்கும் அவரது பெற்றோரே செலவழித்துள்ளனர். 


ரூ.4.6 கோடி செலவு


சீக்கிரமாக ஒரு பெரிய நட்சத்திரமாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு ஏற்பட்ட இந்த அதீத ஆர்வம் தற்போது பல உடல்நலன் சார்ந்த பின்விளைவுகளை சந்திக்கும்படி நேர்ந்துள்ளது. அதாவது, தனக்கு மிகவும் பிடித்த நடிகையை போன்றே ஆக வேண்டும் என்பதால் அந்த சிறுமி தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | அபுதாபி இந்து கோயில்... ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்..!


கிழக்கு சீனாவில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி செய்த இந்த அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவச் செலவு மட்டும் ரூ.4.6 கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற வகையில், அப்பாவித்தனமாக தொடங்கிய இந்த சிறுமியின் செயல்பாடு அவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதித்திருக்கிறது.


வலி மிகுந்த சர்ச்சைகள்


அவரது பள்ளி காலம் முழுவதும் அந்த சிறுமி கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக,  கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கும் தனது தாயுடன் ஒப்பிட்டுக்கொண்டும், தனது பிற வகுப்புத் தோழர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும் தாழ்வு மனப்பான்மையால் பாதிப்படைந்துள்ளார். இந்த பாதுகாப்பின்மை அவரை மேலும் மேலும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை தொடர வழிவகுத்தது. தொடர்ந்து தனது முகத் தோற்றத்தை மாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த பள்ளிப்படிப்பையையும் கைவிட்டுள்ளார்.


தொடர்ந்து அவரின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்னர். இருப்பினும், அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, வலி மிகுந்த மருத்துவ சிகிச்சையான எலும்பு ஷேவிங் போன்றவற்றை செய்துள்ளார், இதனால் அவர் சில வாரங்கள் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார். 


அவரின் முகமாற்றம் ஒருபுறம் இருக்க, தனது பழைய நண்பர்களுக்கு தான் யார் என்றே அடையாளம் தெரியாதது அவருக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. மற்றவர்கள் இதுயார் என்று கேட்கும்போது, தனது மகள்தான் என்ற அவரின் பெற்றோர் தயக்கம் காட்டுவதாகவும் அவர் மனம் வருத்தப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் முகத்தோற்றம் என்பது பொருட்டல்ல என்பதுதான்.


மேலும் படிக்க | MH370 மாயமான மர்மம்: தேட தயாராக இருப்பதாக மலேசியா மீண்டும் அறிவிப்பு
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ