காபூல்: அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களை தாக்கிய தாலிபான்களின் தற்கொலைப்படைத் தாக்குதல் வீர்ரகளின் குடும்பங்களுக்கு நிலம் மற்றும் பணம் வழங்கப்படும் என்று தாலிபான் அமைப்பு உறுதியளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாதத்தை தீவிரமாக ஆதரிக்கும் தாலிபான்கள் (Taliban) மறுபுறம் சர்வதேச ஆதரவையும் நாடுவது வியப்பை அளிக்கின்றது.


காபூல் ஹோட்டலில் ஒன்றுகூடிய தற்கொலைப் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தாலிபானின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி ரொக்கப் பரிசுகளை வழங்கியதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கோஸ்டி செவ்வாய்க்கிழமை சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவில் தெரிவித்தார்.


"தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தியாகிகள் மற்றும் ஃபிதாயீன்களின் தியாகங்களை ஹக்கானி பாராட்டினார்" என்று கோஸ்டி ட்வீட் செய்தார்.


அவர்களை "இஸ்லாம் மற்றும் நாட்டின் ஹீரோக்கள்" என்று கூறிய செய்தித் தொடர்பாளர், அனைத்து ஹக்கானி தற்கொலைத் தாக்குதல் வீர்ரகளின் ரு குடும்பத்திற்கும் 10,000 ஆப்கானிகளை (USD 112) விநியோகித்ததாகக் கூறினார். மேலும் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


ALSO READ: Taliban vs good: உலகமே பாராட்டும் வகையில் தாலிபான்கள் செய்த காரியம் என்ன? 


ஹக்கானி தற்கொலைத் தாக்குதல் வீர்ரகளின் குடும்பங்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் புகைப்படங்களையும் கோஸ்டி பகிர்ந்துள்ளார்.


சர்வதேச சமூகத்துடன் நல்ல உறவுகளை கொண்டிருக்க தாலிபான் விரும்புகிறது. எனினும், எனினும், தாலிபானின் ஆப்கானிஸ்தான் (Afghanistan) இஸ்லாமிய அமீரகத்தை முறையாக அங்கீகரிக்க சர்வதேச சமூகம் தயங்குகிறது.


தாலிபான்களுக்கும் மற்ற வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச உதவியை நாடுவதில் கவனம் செலுத்தியது. இன்னும் சில காலத்தில் ஆப்கான் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் கணித்துள்ளதே இதற்கு காரணம்.


அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பான ஆட்சியாளர்களாக தங்களை காட்டிக்கொண்டு இஸ்லாமிய அரசின் தற்கொலைத் தாக்குதல்களை தாலிபான் கண்டித்தது. ஆனால், தற்போது தற்கொலைத் தாக்குதல்களை ஊக்குவிப்பது போல, அவர்களது குடும்பங்களுக்கு வெகுமதிகளை வழங்கிய தாலிபானின் இந்த நிலைப்பாடு மற்றொரு முகத்தைக் காட்டுகிறது.


ஆப்கானில் பயங்கரம்: குழந்தையை தூக்கிலிட்ட கொடூர தாலிபான்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR