தற்கொலை படை தாக்குதலில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாகூரில் உள்ள பஞ்சாப் மாகாண  முன்பு மருந்து சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து தயாரிப்பாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். திடிரென போராட்டக்காரர்கள் கும்பலுக்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளுடன் புகுந்து தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். 


இத்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 73 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் 5 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர். காயம் அடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.


இத்தாக்குதலுக்கு ஜமாத்-வுர்-அக்ரகர் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அது தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையது. தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் செரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.