Myanmar: மியான்மர் போராட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் காரணம் என்ன?

பிப்ரவரியில் மியான்மர் ராணுவம் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து குறைந்தது 701 பேர் கொல்லப்பட்டனர், 3,100 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரியில் மியான்மர் ராணுவம் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து குறைந்தது 701 பேர் கொல்லப்பட்டனர், 3,100 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டங்களின் போது 650 கைது வாரண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் (Assistance Association for Political Prisoners) தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் புதிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அனடோலு ஏஜென்சி (Anadolu Agency) தெரிவித்துள்ளது.
Also Read | குரானின் வசனங்கள் சட்டத்தை மீறுகிறதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை 3,012 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ராணுவம் (Military) 656 கைது வாரண்டுகள் பிறப்பித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை பாகோவில் எதிர்ப்பாளர்களுடன் ராணுவத்திற்கு ஏற்பட்ட மோதலில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
Also Read | ”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு
பிப்ரவரி 1 ம் தேதி மியான்மரின் ராணுவம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 2020 நவம்பர் 8ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்கள் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்திருந்தது.
நாட்டின் பிரபலமான தலைவரும் வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூகி உட்பட பல அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ள ராணுவம், மியான்மரில் ஓராண்டுக்கு எமர்ஜென்சியை அறிவித்தது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக தொடரும் நிலையில், ராணுவத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார்கள்.
Also Read | விந்தை உலகம்: சீனாவில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR