விபத்தான இந்தோனேஷியா விமானத்தை ஓட்டியவர் இந்தியர்?
இந்தோனேஷியாவில் 189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி டெல்லியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்தோனேஷியாவில் 189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி டெல்லியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இன்று காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஜக்ர்த்தா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, ஜேடி-610 பயணிகள் விமானம் காணாமல் போனதாக அறிவித்தது. அந்த விமானத்தில் மொத்தம் 189 பயணிகள் இருந்தது தெரியவந்தது. விமானத்தின் பாகங்கள் ஜாவா கடல்பகுதியில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தில் விமானியாக பணியாற்றியவர் டெல்லியை சேர்ந்த பவி சுனேஜா என தெரிய வந்துள்ளது. போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் திறமை மிகுந்தவரான பவி சுனேஜா, டெல்லிக்கு பணி மாற விரும்பினார். 31 வயதாகும் பவி சுனேஜா, சர்வதேச விமானி உரிமம் பெற்றவர். 2011 மார்ச் மாதத்தில் இந்தோனோஷியாவின் லயன் ஏர் விமான நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.