நியூசிலாந்து : நியூசிலாந்து நாட்டில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இம்மாத இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் வூகான் நகரில்,  கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரசில், ஸ்பெயின், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, உலக நாடுகள் அமல்படுத்தின.


இதனிடையே, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், குறைந்த காலத்திலேயே, அந்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, பொது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில்,6 மாதங்களுக்கு பிறகு, ஆக்லாந்து நகரில், கடந்த வாரத்தில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, 3 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கை, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அமல்படுத்தினார்.


ALSO READ குகைக்குள் குவியலாய் கிடந்த எலும்புகள்..! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி..!


இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் டெல்டா வகை கொரோனா தொற்று என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதை அடுத்து அமலில் உள்ள முழு ஊரடங்கை இம்மாத இறுதி வரை அதாவது வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து பிரதமர் ஜெசிந்தா கூறுகையில், டெல்டா வகை கொரோனா தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது , கொரோனா முதலாவது அலையில் கடைபிடித்த நடவடிக்கைகளை பொது மக்கள் மீண்டும் கடைபிடித்து கொரோனாவுக்கு எதிரானப் போரில் வெற்றி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe