பல தசாப்தங்களாக குளிக்காததற்காக "உலகின் அழுக்கு மனிதர்" என்று அழைக்கப்படும் ஈரானியர், அமு ஹாஜி காலமானார். அவருக்கு வயது 94. ஈரானிய மொழியில் ஹாஜி என்பது முதியோர்களுக்கு வழங்கப்படும் புனைப்பெயர் ஆகும். ஈரானின் தேஜ்கா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 23) அவர் காலமானதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளித்தால் உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்ற பயத்தினால் பல ஆண்டுகளாக குளிப்பதை அவர் தவிர்த்துள்ளார். இருப்பினும், சில மாதங்களுக்கு முன்புதான், ஏறத்தாழ 64 ஆண்டுகளில் முதல் முறையாக குளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவரை தனியாக அழைத்தச்சென்று குளிப்பாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | இந்த கம்பெனியின் ஷாம்புவை பயன்படுத்துகிறீர்களா? புற்றுநோய் ஏற்படும் அபாயம்!


மேலும், ஹாஜி தனது வாழ்நாள் முழுவதும் செங்கல்களால் கட்டப்பட்ட ஒரு திறந்தவெளி குடிசையில் தனிமையில் வாழ்ந்துள்ளார். வெறும் தரையில் குளித்தோண்டி தூங்கிக்கொண்டிருந்த அவருக்காக கிராமத்தினர் அந்த குடிசையை கட்டிக்கொடுத்துள்ளனர். 


ஹாஜி அவரது இளமை பருவத்திலேயே உணர்ச்சி ரீதியில் பாதிக்கப்பட்டதன் காரணத்தால்தான் அவர் மற்றவர்களை விட வித்தியாசமானவராக இருந்து வந்தார் என கூறப்படுகிறது. ஹாஜி சமைத்தோ அல்லது புதிய உணவுகளை உண்ணாமல், அழுகிய முள்ளம்பன்றிகளை தேர்ந்தெடுத்து உண்பதும், விலங்குகளின் மலத்தை புகைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


"The Strange Life of Amou Haji" என்ற பெயரில் 2013ஆம் ஆண்டு,  ஹாஜியின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | ஒரு நட்சத்திரத்தின் இறப்பு இவ்வளவு அழகாய் இருக்குமா? இது Supernova புகைப்படம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ