சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வுக்குப் பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிரான மம்மிகளின் DNA பகுப்பாய்வு அவற்றின் எதிர்பாராத முடிவுகளை தந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்த மம்மிகள் 4000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்பட்டுள்ளது. பண்டைய பனி யுக ஆசிய மக்களின் வழித்தோன்றலில் வந்த  வடக்கு யூரேசிய  குழுவிற்கு சொந்தமானது என்று ம் கூறியது.


தற்போது, ​​சைபீரியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பழங்குடியின மக்களுடன், சீனாவில் கண்டறியப்பட்ட மம்மிகளுக்கு நெருக்கம் இருக்கிறது. இந்த வேட்டையாடும் மக்கள்க் கூட்டத்தின் தடயங்கள் இன்றைய மக்கள்தொகையின் மரபணுக்களில் ஓரளவு மட்டுமே வாழ்கின்றன.


Also Read | ஆச்சர்ய தகவல்! கொரோனா ‘இங்கு’ இல்லை; இல்லவே இல்லை..!!


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் இணைப் பேராசிரியரான கிறிஸ்டினா வாரின்ரின் கூற்றுப்படி, "மம்மிகள் கண்டறியப்பட்டதில் இருந்து, கண்டுபிடிப்பிலிருந்து விஞ்ஞானிகளை மட்டுமல்ல, பொதுமக்களையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளன."


"இந்த மம்மிகள் பாதுகாக்கப்படு விதம் மட்டுமல்ல, அவை இருப்பதும் மிகவும் அசாதாரண சூழலில் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கண்டறியப்பட்ட மம்மிகள், தொலைதூர கலாச்சார கூறுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.


சின்ஜியாங்கின் டாரிம் மற்றும் துங்கேரியப் படுகைப் பகுதியில் 1990ஆம் ஆண்டு வாக்கில் 13 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன. "அவை மரபணு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட உள்ளூர் மக்களுடன் ஒத்திருப்பதற்கான  வலுவான ஆதாரங்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்," என்று வாரினர் கூறினார்.


Also Read | இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டில் பாலின அடையாளம் தேவையில்லை


"எது எவ்வாறாயினும், அவர்களின் மரபணு தனிமைப்படுத்தலுக்கு மாறாக, அந்த காலகட்டத்தில் இருந்த விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் தொடர்பான  அண்டை  புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை நாடுகளிடமிருந்து வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் வேறு எந்த குழுக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படாத தனித்துவமான கலாச்சார கூறுகளையும் (unique cultural elements) இந்த மம்மிகள் கொண்டுள்ளன” என்று அவர் கூறினார்.


கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாதிரிகள் வெண்கல யுகத்தைச் (Bronze Age) சேர்ந்தவை. "இந்த மம்மிகள் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை" என்று செயிண்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியரான மைக்கேல் ஃப்ராசெட்டி கூறினார்.


லார்ட் ஆஃப் சிபான் (Lord of Sipan) என்ற மம்மி, 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்று என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் மம்மி வைக்கப்பட்டிருந்த பிரதான கல்லறையை யாரும், குறிப்பாக திருடர்கள் அணுகாமல் இருந்தனர்.  


Read Also | உலகிலேயே மிகப் பழமையான Pyramid ரகசியத்தை சீனா மறைப்பது ஏன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR