முற்றிவரும் வர்தகப்போர்; அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!
அமெரிக்கா - சீனா இடையே நடைப்பெற்று வரும் வர்தகப்போர் முற்றி வரும் நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி `வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்` என தெரிவித்துள்ளது!
அமெரிக்கா - சீனா இடையே நடைப்பெற்று வரும் வர்தகப்போர் முற்றி வரும் நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி "வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்" என தெரிவித்துள்ளது!
அமெரிக்கா - சீனா இடையில் கடந்த சில மாதங்களாக வர்தகப்போர் நடைப்பெற்று வருகிறது. இச்சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தாளான ‘பீப்பிள்ஸ் டெய்லி' (People's Daily), “வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம். நாங்கள் உங்களை எச்சரிக்கவில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்” என அமெரிக்காவை மீண்டும் எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு ‘ரேர் எர்த்ஸ்' என்று சொல்லப்படும் பொருளை கொடுக்காமல் இருந்து, வர்த்தகப் போரை தனக்கு சாதகமாக கொண்டு வர சீனா தயங்காது என்றும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேர் எர்த்ஸ் என்பது 17 வேதியல் மூலப் பொருட்கள் கொண்ட ஒரு பொருள். அது, அதிநவீன மின்னணுப் பொருட்கள் முதல் ராணுவ ஆயுதங்கள் செய்வது வரை பயன்படுத்தப்படுகிறது.
இதுவரை இந்த ரேர் எர்த்ஸை அமெரிக்காவுக்கு கொடுக்க மாட்டோம் என்று சீனா சொல்லவில்லை. என்றபோதிலும் தற்போது சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் நிறுவனக் கட்டமைப்பு என்பது மிகவும் அதிக சிக்கல்களைக் கொண்டது. இப்படிப்பட்ட ஓர் அமைப்பில் வர்த்தகப் போர் நடந்தால், யாராலும் ஜெயிக்க முடியாது. எனவே அமெரிக்க தரப்பு, சீனாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் இந்த ‘நாங்கள் உங்களை எச்சரிக்கவில்லை' என்கிற வார்த்தைப் பதம், சீனாவால் மிக நெருக்கடியான நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 2017-ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த எல்லை பதற்றத்தின் போது, சீனா இதைப் போன்றே எச்சரிக்கை விடுத்தது. 1978-ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போதும் சீனா இதைப் போன்று எச்சரிக்கை விடுத்தது.
2014 முதல் 2017 வரை அமெரிக்கா இறக்குமதி செய்த ரேர் எர்த்ஸில் 80% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.