சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக்கின் சந்தை மேம்பாட்டின் முன்னாள் இயக்குனர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சகோதரி ராண்டி ஸூக்கர்பெர்க், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மெக்ஸிகோவின் மஸட்டான் பகுதிக்கும் இடையிலான அவரது சமீபத்திய விமான பயணத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்திடம் சிலிகான் பள்ளத்தாக்கு தொழிலதிபர் கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.


சியாட்டில்-சார்ந்த விமான நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு எழுதிய இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பயணத்தின் போது அவருடன் பயணித்த பயணி ஒருவர், ராண்டி ஸூக்கர்பெர்க்-னை மிகவும் அசெளகரியமாகக் கருத வைத்துள்ளார் என தெரிகிறது. 



ராண்டி ஸூக்கர்பெர்க்-னிடம் அப்பயணி பாலியல் கருத்துக்களை வெளிப்படையாகவும் பேசியதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விமான ஊழியர் ஒருவரிடம் புகார் அளித்தும் சரியான பதில் கிடைக்காத நிலையில் இச்சம்பவம் குறித்து அவர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.



பின்னர், இக்கடிதப் புகாரின் அடிப்படையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் ராண்டி ஸூக்கர்பெர்க்-னுடன் பயணித்த பயணிமீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ராண்டி ஸூக்கர்பெர்க்-னிடம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் மண்ணிப்பு கோரியுள்ளது!