கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பலவிதமான சங்கடங்களை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நாடு எது தெரியுமா? பெறு குழந்தையை, பிடி ஊக்கத்தொகையை என்று உற்சாகப்படுத்தும் நாடு நமக்கு அருகில் இருக்கும் ஒரு நாடு தான்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கார சிங்கப்பூர் நாட்டின் அரசு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் உண்டான மன அழுத்தம் மற்றும் ஆட்குறைப்பு ஆகியவை காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை சிங்கப்பூர் குடிமக்கள் தள்ளி வைத்து வருகின்றனர். அதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 


உலகில் மக்கள்தொகை குறைவான நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். எனவே கடந்த பத்து ஆண்டுகளாக பிறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக சிங்கப்பூர் அரசு ஏற்கனவே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. சிங்கப்பூர் அரசின் அண்மை அறிவிப்பு, முன்பே இருக்கும் சலுகைகளுடன் கூடுதல் சலுகை என்பதையும் அந்நாடு தெளிவுபடுத்தியுள்ளது.  


குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்த பலரும், கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட சூழ்நிலையால் அந்த திட்டத்தை தள்ளி வைப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சிங்கப்பூர் அரசு இந்த ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை எவ்வளவு கொடுக்கப்படும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் அரசு தெரிவித்துள்ளது.


இப்போது, சிங்கப்பூரில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் வரை சலுகைகள் கிடைக்கிறது.


இதுவும் பயனுள்ள செய்தி | வீட்டில் உட்கார்ந்த படி பணத்தை சம்பாதிக்கப்படும் இந்த திட்டத்தில் கவனமாக இருங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR