America Illegal Immigrants Indians: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்துவதற்காக கைது செய்யும் படலம் தொடங்கி விட்டதாகவும், காலிஸ்தான் பிரிவினவாத குழுக்களுடன் தொடர்பில் இருக்கும் சீக்கியர்களை குருதுவாராக்குள் புகுந்து போலீசார் கைது செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபராக டோனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவி ஏற்றதில் இருந்து, அவரது நடவடிக்கைகளால் உலக நாடுகள் நடுக்கத்தில் உள்ளன. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களை வேற்று கிரகவாசிகள் என சாடி வந்த ட்ரம்ப், தான் அதிபர் ஆனதும் அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் எனக் கூறி வந்தார். 


டோனால்ட் ட்ரம்பின் இந்த முடிவுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தன. நாடு கடத்தப்படுவோரின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாழாகிவிடும் என போப் பிரான்சிஸ் பரோத்தம் தெரிவித்திருந்தார். 


அமரிக்கா அதிபராக பொறுப்பேற்றதும் மெக்ஸிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டோனால்ட் ட்ரம்ப், சட்ட விரோதமாக வருவோரை தடுப்பதற்காக 4000 ராணுவ வீரர்களை அங்கு குவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் தினமும் சராசரியாக 500 பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதுகுக்குப் பின்னால் கைவிலங்கிட்டபடி அவர்களை அதிகாரிகள் அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. 


அவ்வாறு கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கொலம்பியா நாட்டவர்கள், இருக்கை மற்றும் ஏசி போன்ற வசதிகள் இல்லாத இரண்டு ராணுவ விமானங்கள் மூலம் கொலம்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த இரு விமானங்களையும் தங்கள் நாட்டில் தரையிற கொலம்பியா அரசு அனுமதிக்காததால், அவை அமெரிக்காவுக்கே திரும்பின. சர்வதேச அரங்கில் இது அமெரிக்கா அதிபர் டோனால்ட் ட்ரம்ப்புக்கு தலைகுனிவாக பார்க்கப்பட்டது. 


இதனால் ஆத்திரமடைந்த டோனால்ட் ட்ரம்ப் கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப் போவதாக தெரிவித்தார். ஒரே வாரத்தில் அந்த வரியை 50% ஆக உயர்த்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். 


வரி உயர்வால் கொலம்பியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதை அடுத்து கொலம்பியாவை ஆளும் இடதுசாரி கட்சியின் அதிபரான குஸ்டோ பெட்ரோ, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 


அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். அதே சமயம் அவர்களை குற்றவாளிகளைப் போல ராணுவ விமானத்தில் அனுப்பாமல்,பயணிகள் விமானத்தில் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் தான் பயன்படுத்தும் அதிபர் விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்வதாகவும் பெட்ரோ கூறினார். 


இதை அடுத்து கொலம்பியா மீது டோனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி அமலுக்கு வராது என அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் அதிலும் குறிப்பாக குஜராத்திகள் சட்ட விரோதமாக தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. டோனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பே அமெரிக்க அரசு நாடு கடத்துவதற்காக 18,000 இந்தியர்களின் பெயர் பட்டியலை அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருந்தனர். 


நாடு கடத்தும் படலம் தொடங்கியபோது சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திரும்பப் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ச்சங்கர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்தியர்களை தேடும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும், சீக்கிய குருதுவாராக்களில் நுழைந்து காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


குருதுவாராவுக்குள் காவலர்கள் நுழைய மதகுருக்கள் எதிர்ப்பு தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டுத் தளங்களில் சோதனையிடக்கூடாது என ஜோ பைடன் ஆட்சியில் அமலில் இருந்த விதி தற்போது நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த காவலர்கள் கைது நடவடிக்கையை முடுக்கி விட்டிருக்கிறார்கள். 


இந்த நிலையில் கொலம்பியர்கள் நாடு கடத்தப்பட்டதைப் போலவே, அமரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களும் ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்படுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது.


மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் பதவியேற்ற பிறகு வாஷிங்டனுக்கு வருகை தரும் முதல் உலகத் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். குடியேற்றம் தொடர்பான முக்கிய பிரச்சினை குறித்தும் அவர்கள் விவாதித்ததாக அவர் கூறினார்.


"இன்று காலை நான் அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது" என்று டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார்.


மேலும் படிக்க - H 1B விசா டிரம்ப் அதிரடி: இந்தியர்களுக்கு பாதகமா? சாதகமா? முழு விபரம்


மேலும் படிக்க - VIDEO: டான்ஸ் ஆடிய டிரம்ப்! பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் செய்கையால் சர்ச்சை!


மேலும் படிக்க - இனி அமெரிக்காவில் ஆண், பெண் மட்டுமே! முதல் நாளே டிரம்ப் அதிரடி! புதிய சட்டம் அமல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ