அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100%-லிருந்து 50%-மாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்  தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஒன்றில் கூறுகையில்.,  "எனது தலைமையிலான அமெரிக்க நாட்டினை பிற நாட்டினர் இனியும் ஏமாற்ற விடமாட்டேன். 
நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு நமது நட்பு நாடுகளில் ஒன்று. என்றபோதிலும் அவர்கள் நமது பொருட்களை இறக்குமதி செய்யும் போது நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள். 


உதாரணத்துக்கு நமது ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கில்களுக்கு இந்தியா 100% வரி விதித்தார்கள். ஆனால் இந்தியா ஒரு மோட்டார் சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பும் போது, நாம் அவர்களிடம் வரி எதுவும் வசூலிப்பதில்லை. 


இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய போது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் வாகனங்களுக்கு 100% வரிவிதிப்பது நியாயம் அற்றது என கூறினேன். 


அதன் காரணமாக பிரதமர் மோடி 100% இறக்குமதி வரியிலிருந்து 50% குறைத்தார். இதுவும் அதிகம் தான், ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வரி விதிப்பதில்லை. 


அதே போல் அமெரிக்க மோட்டார் வாகனங்களுக்கு இந்தியா வரி விதிக்கக்கூடாது என மோடியிடம் தெரிவித்தேன். இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.